துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். மேல் குர்ரம் மாவட்டம் பரசினாரில் அரசுப் பள்ளி ஆசிரியர் முகமது ஷெரீப் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சன்னி மெங்கல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால், மெங்கல் பிரிவினர் அரசு தெரி மெங்கல் மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்து ஷியா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏழு ஆசிரியர்களை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
Tags :