எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா விஜய் மேடையில் திருமாவளவன் பங்கேற்கவில்லை.
விசிகவின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தொகுத்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் டிச. 6ம் தேதி பங்கேற்கிறார்.இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை.
அம்பேத்கர் நூலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட விசிக தலைவர் திருமாவளவன் பெற்றுக் கொள்வார் என திட்டமிட்டிருந்த நிலையில் திடீர் மாற்றம்,நடந்துள்ளது.த.வெ.க. தலைவர் விஜய் வெளியிடும் நூலை, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு பெற்றுக் கொள்கிறார்.இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே கலந்து கொள்கிறார்.விஜய் கட்சி அறிவிப்புக்குப் பிறகு, விஜய்யும் திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியான நிலையில், திருமாவளவன் பங்கேற்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
Tags : நூல் வெளியீட்டு விழா விஜய் மேடையில் திருமாவளவன் பங்கேற்கவில்லை.