பாஜக நிர்வாகிகள்,காவல்துறையை கண்டித்து சகோதரிகள் பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டம்.

by Editor / 18-12-2022 08:49:49am
பாஜக நிர்வாகிகள்,காவல்துறையை கண்டித்து சகோதரிகள் பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அண்ணா பஸ் நிலையத்தில் மதுரையை சேர்ந்த நந்தினி,அவரது சகோதிரி நிரஞ்சனா இருவரும் டாஸ்மாக்கினை மூட வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  துண்டுபிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்தப்பகுதியில் வந்த பாஜக நிர்வாகிகள் அவதூறாக பேசி இரண்டுபேரையும் தாக்க முயற்சி செய்ததாகவும், அங்கு வந்த காவல்துறையினரும், பாஜகவினருக்கு துணையாக இருந்தது மட்டுமின்றி, காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று தங்களையும் அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதைக்கண்டித்து சகோதரிகள் இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களுடைய கோரிக்கைகளை ஜனநாயக முறைப்படி மக்களிடம் கொண்டு சென்றதாகவும். ஆனால் பாஜக நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் தங்களை அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டியுள்ள நிலையில் தற்போது கூடுதல் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via