சட்டமன்றத் தேர்தலில் விஜயை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்த வியூகம்.

by Admin / 07-02-2026 11:51:26pm
சட்டமன்றத் தேர்தலில் விஜயை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்த வியூகம்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன நடிகர் விஜய் தனது தேர்தல் அறிமுகத்திற்காக சென்னையில் உள்ள வேளச்சேரி அல்லது விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .மேலும் வி எழுத்தில் தொடங்கும் விக்ரவாண்டி ,வேதாரணியம் மற்றும் வேடசந்தூர் ஆகிய தொகுதிகளும் அவரது பரிசீலனை இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் போட்டியிடும் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் உலா வருகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு மாற்று தொகுதியை வழங்கிவிட்டு விஜயை எதிர்த்து திமுக வேட்பாளரின் நிறுத்த  வியூகம் அமைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன விஜய் பொறுத்தவரை திமுகவை தனது அரசியல் எதிரி என்றும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் ,2026 தேர்தல்களும் நேரடியாக தேவையற்ற மற்றும் திமுகவுக்கு இடையிலான போட்டியாகவே உருவெடுத்து வந்துள்ளது .234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவர்கள்விண்ணப்ப படிவங்கள் விநியோகம் ஆறாம் தேதி தொடங்கிய நிலையில் முதல் விண்ணப்பம் விஜய் பெயரில் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories