ரூ.6750 ஓய்வூதியம் உள்ளிட்ட சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!

by Admin / 07-02-2026 11:39:50pm
ரூ.6750 ஓய்வூதியம் உள்ளிட்ட சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!

சத்துணவு மற்றும் அங்கன் காவடி பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முழுவதும் உள்ள 71,000 மேற்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கு கால வரை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் இளநிலை உதவியாளர் நிலையில் அவர்களுக்கு ரூபாய் 19,500 ஊதியமாக நிர்ணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சத்துணவு அமைப்பாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூபாய் 2000 ஓய்வூதியத்தை ரூபாய் 10,000 ஆக உயர்த்த வேண்டும் .மேலும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையான அகவிலைப்படி உடன் கூடிய 6,750 ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சத்துணவு பணியாளர்களில் பெரும்பாலோர் மாற்றுத்திறனாளிகளாக இருப்பதால் அவர்களுக்கு தனியாக மாதம் ரூபாய் 3,000 சிறப்பு உதவி தொகை வழங்க வேண்டும் . சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சத்துணவு ஊழியர்களின் நாலு நாள் காத்திருப்பு போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண வேண்டும் என்றும்அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories