மாஜிஸ்திரேட் பணிக்கு இனி இது கட்டாயம் - உச்ச நீதிமன்றம்

by Editor / 20-05-2025 02:18:08pm
மாஜிஸ்திரேட் பணிக்கு இனி இது கட்டாயம் - உச்ச நீதிமன்றம்

நீதித்துறை பணியில் சேர கட்டாயம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதன்படி முன்சீப், மாஜிஸ்திரேட் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தற்போதைய பணியமர்த்தலுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்றும், அடுத்த முறை தொடங்கப்படும் நியமன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via