மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

by Staff / 07-10-2023 04:52:22pm
மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமாரின் மகள் சுகிர்தா முதுநிலைப் மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். நேற்று இவர் வகுப்பிற்கு செல்லாமல் விடுதி அறையில் தங்கி இருந்துள்ளார். கல்லூரி நிர்வாக உட்பட பல்வேறு மன அழுத்த காரணங்களாக இவர் அறுவை சிகிச்சையின் பொழுது தசைகளை தளர்வடைய செய்யும் மருந்தினை பயன்படுத்தி தற்கொலை செய்துள்ளார். இவரது அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் தனது இந்த முடிவிற்கு மூன்று பேராசிரியர்கள் காரணம் என கூறியுள்ளார்.மாணவி தற்கொலை செய்த தகவல் குலசேகர காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தற்கொலை செய்த மாணவியின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்கின்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. இவருடைய உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு தற்கொலைக்கான உண்மை பின்னணி வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கல்லூரியில் வருடத்திற்கு ஒரு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதற்கான காரணம் மர்மமாகவும் இருந்து வருவதும் தொடர் கதையாகவும் உள்ளது.

 

Tags :

Share via

More stories