வேலைவாய்ப்புக்கான பணி நியமன கடிதங்களை வழங்கிய உதயநிதி

by Staff / 02-08-2024 05:36:38pm
வேலைவாய்ப்புக்கான பணி நியமன கடிதங்களை வழங்கிய உதயநிதி

ஈரோட்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை பெற்ற 3,784 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன கடிதங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பல முதல் தலைமுறை பட்டதாரிகளின் வாழ்வில் புதுமைப்பெண்ணும், நான் முதல்வனும் ஒளியேற்றி வைத்திருக்கின்றன. இத்திட்டங்கள் தந்த ஏற்றத்தால் மகிழ்ச்சியும், உற்சாகமும் பொங்க நம் இளைஞர்கள் கூறிய நம்பிக்கை வார்த்தைகள், நெகிழ்ச்சியைத் தந்தன என எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via