வாகன சோதனையின் போது கஞ்சா கடத்திய நபர் கைது.

by Editor / 06-04-2023 08:13:37pm
வாகன சோதனையின் போது கஞ்சா கடத்திய நபர் கைது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கிளியனூர் சோதனை சாவடியில் சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்பொழுது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த வானூர் தாலுக்கா கீழ்ப்பத்துப்பட்டுபகுதியைச் சேர்ந்த மணி கபிலன் என்கின்ற டாட்டு மணி  என்பவனை கைது செய்து அவனிடம் இருந்த 165 கிராம் கஞ்சா பெட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவனை கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

 

Tags :

Share via
Logo