அ.தி.மு.க அவை தலைவராக உள்ள தமிழ் மகன் உசேன் குறித்த தவறான வதந்திகள்.
அ.தி.மு.க அவை தலைவராக உள்ள தமிழ் மகன் உசேன் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதற்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஸ்ரீ வாரு மாளிகையில் நடந்த பொழுது உடல் நல குறைவின் காரணமாக அவை தலைவர் வரவில்லை. அவருக்கு பதிலாக தற்காலிக அவை தலைவராக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியை எடப்பாடி பழனிச்சாமி நியமித்தார். இந்நிலையில் , அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் இறந்து விட்டதாக வதந்திகள் பரவின. ஒருவர் உடல் நல குறைவின் காரணமாக மருத்துவ பரிசோதனையில் இருக்கும் போது இது போன்ற தவறான வதந்திகள் பரப்புவது மனித தர்மத்திற்கு மாறானது என்று அ.தி.மு.க கண்டித்துள்ளது.
Tags :













.jpg)





