அ.தி.மு.கவை வலுவிழக்க செய்வதன் மூலம் தனது அதிகாரத்தை தக்க வைக்க தி.மு.க முயல்வதாக...பா.ஜ.க.தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பிளவு பட்டதே திமுக ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணம் என்றும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வலிமையாக இருந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்றும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க அரசை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். அத்துடன், அதிமுகவில் தற்போது நிலவும் பிளவுகளுக்கு பின்னணியில் திமுக தூண்டுதல் இருப்பதாகவும் அ.தி.மு.கவை வலுவிழக்க செய்வதன் மூலம் தனது அதிகாரத்தை தக்க வைக்க தி.மு.க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பா.ஜ.க மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடாது என்றும் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தி.மு.கவை அகற்றுவதே தற்போதைய நோக்கம் என்றும் அதற்காகவே செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Tags :



















