ஷோபனாவாக நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன்: நித்யா மேனன்
ஷோபனாவாக நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன் என தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "எந்த ஒரு நடிகருக்கும் ஒரு சில கதாபாத்திரங்கள் அவர்களின் திரைப்பயணத்திலேயே முக்கியமானதாக இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும். ஷோபனா எனக்கு அப்படிப்பட்ட கதாபாத்திரம்தான். ஷோபனாவாக நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Tags :