சபரிமலை நிறைபுத்தரி பூஜை 12-08-24 திங்கட்கிழமை காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்கு நடைபெறுகிறது

by Editor / 08-08-2024 03:48:44pm
சபரிமலை நிறைபுத்தரி பூஜை 12-08-24 திங்கட்கிழமை காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்கு நடைபெறுகிறது

நிறைபுத்தரி பூஜைக்கான நெல்கதிர்கள் 11-08-24 ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு  அச்சன்கோவிலில் இருந்து சபரிமலைக்கு  ஊர்வலமாக கொண்டு செல்லபடுகிறது.. இதற்கான ஏற்பாடுகளை  திருஆபரணம் கமிட்டி தலைவர் ஏசிஎஸ்ஜி ஹரிஹரன் உபதேச கமிட்டி தலைவர் பிஜூலால்  அச்சன்கோவில் தேவசம் நிர்வாக அதிகாரி துளசிதரன் பிள்ளை ஆகியோர் செய்து வருகிறார்கள்..

ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் அனைத்து முக்கிய திருகோவில்களிலும்  மலையாள புத்தாண்டான சிங்கம் ( ஆவணி ) மாத பிறப்பிற்க்கு முன் கற்கடக ( ஆடி ) மாதத்தில் புதிய நெல்கதிர்கள் வைத்து நிறைபுத்தரி  பூஜை செய்து அந்த நெல்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.. சுவாமிக்கு படைக்கபட்டு பூஜை செய்யபட்டு பிரசாதமாக வழங்கபடும் நெல்கதிர்களை வாங்கி நம் வீடுகளில் வைக்க ஜஸ்வரியம் பெருகும் என்பது ஐதீகம்.. இதனால்  நெல்கதிர்கள் பிரசாதம் வாங்க கேரள முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.. இதன் ஐதீககத்தில் பெரும் நம்பிக்கை உள்ள கேரள பக்தர்கள்  கடுமையான நெரிசலில்  போட்டி போட்டு நெல்கதிர்களை வாங்கி செல்வர்.. பின் சாந்திமார்கள்  நிறைபுத்தரி நெல்கதிர்களில் இருந்து கைகுத்தல் மூலம் புது அரிசி எடுத்து அதில்  சுவாமிக்கு மடபள்ளியில்  நைவேத்தியம் செய்து படைத்து பூஜை செய்வார்கள்..  இதுவே நிறைபுத்தரி பூஜை ஆகும்..

ஆண்டு தோறும் நிறைபுத்தரி பூஜை வைபவத்திற்க்கு திருவாங்கூர் கொட்டாரத்தில் இருந்து நாள்  முகூர்த்த நேரம் குறிக்கபட்டு தேவசம்போர்டு க்கு அனுப்பி வைப்பார்கள் அதன்படி அந்த நாளில் நேரத்தில் நிறைபுத்தரி பூஜை நடத்த உத்தரவு இட்டு அறிவிப்பு செய்யும் அதன்படி அந்த நாளில் அந்த முகூர்த்த நேரத்தில் நிறைபுத்தரி பூஜை நடைபெறும்.. 

அதன்படி இந்த வருடம் 12-08-24 திங்கட்கிழமை காலை 5.45 முதல் 6. 30 மணிக்கு நிறைபுத்தரி பூஜை செய்ய திருவாங்கூர் கொட்டாரம் நேரம் குறித்து திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு அறிவுறுத்தியது.. அந்தபடி அனைத்து முக்கிய கோவில்களில் குறிப்பிட்ட நாளில் முகூர்த்தத்தில் நிறைபுத்தரி பூஜை நடத்த தேவசம்போர்டு உத்தரவிட்டு சபரிமலை, அச்சன்கோவில், ஆரியங்காவு, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோவில்  உள்ளிட்ட அனைத்து முக்கிய கோவில்களில் நிறைபுத்தரி பூஜை நடைபெற உள்ளது..

இதற்கான நெல்கதிர்கள் முன்பு திருவாங்கூர் கொட்டாரத்தில் இருந்து அனைத்து கோவில்களுக்கும் வழங்கபட்டு வந்தது.. தற்போது காலமாற்த்தில் அனைத்து கோவில்களுக்கும் கொட்டாரத்தில் இருந்து வழங்குவது கடினம் என்பதால் அந்த அந்த கோவில்கள் நிர்வாகதினர் கோவில் கமிட்டியினர் ஏற்ப்பாட்டில் நெல்கதிர்கள் கொண்டு வந்து நிறைபுத்தரி பூஜை நடத்த அறிவுறுத்தபட்டது.. 

அதன்படி சபரிமலைக்கு நிறைபுத்தரி பூஜைக்கான நெல்கதிர்கள் தேவசம்போர்டு ஏற்ப்பாட்டில் பாலக்காடு மற்றும் சில ஊர்களில் உள்ள கோவில் கமிட்டியினர் அளித்து வந்தனர்..

இந்நிலையில் 2014 ம் ஆண்டு அப்போதைய தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் அவர்கள் அவர்கள் தலைமையில் நடந்த நிறைபுத்தரி ஆலோசனை கூட்டத்தில் கேரளத்தில் எந்த கோவிலுக்கும் இல்லாத வண்ணமாக  அச்சன்கோவில் அரசன் ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பனுக்கு சொந்தமாக 36 ஏக்கர் வயல் இருப்பதால் இனி சபரிமலைக்கு நிறைபுத்தரி நெல்கதிர்கள் அச்சன்கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் நிறைபுத்தரி நெல்கதிர்களை திருஆபரணபெட்டி வாகனத்தில் திருஆபரணபெட்டி ஊர்வலம் போன்று சிறப்பாக  கொண்டு செல்ல வேண்டும் என்றும்   முடிவு செய்யப்பட்டது.. மேலும் பழைய படி  பாலக்காடு மற்றும் சில ஊர் கமிட்டியினரால்  நெல்கதிர்கள் கொண்டு வரபட்டாலும் அதில் அச்சன்கோவில் அரசனின் நெல்கதிர்கள் என்ற முறையில்  அச்சன்கோவில்  கோஷயாத்திரை கமிட்டி  நெல்கதிர்கள் தான் நிறைபுத்தரி பூஜைக்கு ஏற்று கொள்ளபடும்  பிரதான  நெல்கதிர்களாக  இருக்கும் என்றும்.. அச்சன்கோவிலில் இருந்து நிறைபுத்தரி கோசயாத்திரை  செல்லும் வழியில் உள்ள முக்கிய கோவில்களுக்கும் நிறைபுத்தரி பூஜைக்கான  நெல்கதிர்கள் வழங்குவது என்றும் முடிவு செய்யபட்டது.. அதன்படி தற்போது  சபரிமலை நிறைபுத்தரி பூஜை க்கு நெல்கதிர்கள் அச்சன்கோவிலில் இருந்துகொண்டு ஊர்வலமாக  செல்லபடுகிறது..

அச்சன்கோவில் அரசன் ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பனுக்கு சொந்தமாக 36 ஏக்கர் வயல் அவரின் கால் அடியில் இருப்பதை போன்று அச்சன்கோவிலுக்கு நேர் கீழே தமிழ்நாட்டில்  மேக்கரை கிராமம் அருகில் கோட்டைதிரடு என்ற ஊரில் அமைந்து உள்ளது.. இங்கு இருந்து தான் நிறைபுத்தரி பூஜைக்கு தேவையான நெல்கதிர்கள் பயிர் செய்து அறுவடை செய்து கொண்டு செல்ல வேண்டும்.. ஆனால் தமிழ் மாத கணக்கில் ஆடி மாதம் நெல்கதிர்கள் தேவைபடுவதால் கடும் கோடையான சித்திரை மாதத்தில் நடவு செய்ய வேண்டும்.. அப்போது உள்ள தண்ணீர் பற்றாக்குறை மேலும் அங்கு அருகில் யாரும் அந்த காலகட்டத்தில்  நடவு செய்யதாதது போன்ற நடை முறை சிக்கல்களால் தற்போது தமிழ்நாட்டில்  நன்றாக விளைந்து இருக்கும் வயல்களாக தேர்வு செய்து நெல்கதிர்கள் வாங்கி அச்சன்கோவிலுக்கு கொடுக்கபட்டு வருகிறது..

அதன்படி இந்த ஆண்டு  நிறைபுத்தரி பூஜை க்கு தேவையான   நெல்கதிர்கள் தமிழகத்தில் இருந்து திருஆபரணபெட்டி வாகனத்தில்   நேற்று  அச்சன்கோவிலில் கொண்டு சென்று திருஆபரண கமிட்டி தலைவர் ஏசிஎஸ்ஜி ஹரிஹரன் அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவிலில்  உபதேச கமிட்டியின் துணை தலைவர் உண்ணி பிள்ளை அவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.. 

இன்று முதல் மூன்று நாட்கள்  அச்சன்கோவில் கமிட்டியினரால்  நெல்கதிர்கள்  கைபார்த்து சுத்தம் செய்து சிறு  கட்டுகளாக 108 கட்டுகள்  கட்டி பட்டு வஸ்திரம் சுற்றபடும்..  பின் நிறைபுத்தரி நெல்கதிர்கள் சனிக்கிழமை இரவு  புண்ணியதானம் செய்யபட்டு.. பூஜைகள் செய்து வைக்கபடும்.. இதில் 18 கட்டுகள் நிறைபுத்தரி நெல்கதிர்களை ஏற்றி செல்லும் திருஆபரணபெட்டி வாகனத்தில் அலங்காரத்தில் வைக்கபடும்.. 36 கட்டுகள் ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள முக்கிய கோவில்களுக்கு வழங்கபடும்.. 54 கட்டுகள் சபரிமலை சன்னிதானம் சென்றடையும்..

அச்சன்கோவிலில் 11-08-24 ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணிக்கு நடை திறந்து  நிர்மால்ய தரிசனம் முடித்ததும்  5 மணியளவில் அலங்கரிக்கபட்ட திருஆபரணபெட்டி வாகனத்தில் நிறைபுத்தரி நெல்கதிர்கள்  ஏற்றபட்டு  திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் அவர்கள்  தலைமையில் தேவசம்போர்டு அதிகாரிகள், அச்சன்கோவில் தேவஸ்வம், திருஆபரணபெட்டி கமிட்டி, உபதேச கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பங்கு பெறும் சபரிமலை  நிறைபுத்தரி கோஷயாத்திரை  ஊர்வலம் தொடங்கும்..

6 மணி அளவில் செங்கோட்டை விரைவு பேருந்து பணிமணை எதிரில் வந்தடையும் நிறைபுத்தரி நெல்கதிர்கள் ஊர்வலத்திற்கு அச்சன்கோவில் திருவாபரணபெட்டி வரவேற்பு கமிட்டி தென்காசி செயலாளர் மாடசாமி ஜோதிடர் தலைமையில் தமிழகத்தை சேர்ந்த கமிட்டி நிர்வாகிகள்  உறுப்பினர்கள்  மற்றும் பக்தர்கள் வரவேற்பு அளிப்பார்கள்..

அதை  தொடர்ந்து நிறைபுத்தரி கோசயாத்திரை கோட்டைவாசல் கருப்பசாமி கோவில் வழியாக  ஆரியங்காவு ஐயப்பன் கோவில், புனலூர் கிருஷ்ணன் கோவில், புன்னலை சிவன் கோவில், கலஞ்சூர் சிவன் கோயில், மலையாளபுழா பகவதி அம்மன்  கோவில், மற்றும் கோணி, ரண்ணி, பெருநாடு, பிரயார், பத்தினம்திட்டா, நிலக்கல் உள்ளிட்ட முக்கிய திருக்கோவில்களில் அனைத்திலும் அந்த கோவில் கமிட்டி மற்றும்  பக்தர்கள் சார்பாக வரவேற்ப்பை பெற்று கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் நெல்கதிர்களுக்கு  பூஜை செய்யபட்டு அந்த கோவில்களுக்கான நிறைபுத்தரி கதிர்களை ஒப்படைத்து விட்டு சபரிமலை  கொண்டு செல்லபடும்.. இவ்வாறு செல்லும் நிறைபுத்தரி கோசயாத்திரை செல்லும்  வழியில்  மொத்தம் 36 கோவில்களுக்கு நிறைபுத்தரி  நெல்கதிர்கள் வழங்கி  சென்று மாலை 4 மணிக்கு பம்பை சென்றடையும்.. 

அங்கு பம்பை கணபதி கோயில் நெல்கதிர்களை வைத்து விட்டு ஊர்வலத்தினர்  பம்பையில் நீராடி மாலை 5 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கபட்டதும்.. பம்பை கனபதி கோவில் நடை திறக்கபட்டு நெல்கதிர்களுக்கு பூஜை செய்து  அங்கு இருந்து அதற்கு  என விரதம் இருந்த 54 பக்தர்கள் 54 நிறைபுத்தரி  நெல்கதிர் கட்டுகளை  தலையில் தாங்கி சன்னிதானம் கொண்டு செல்வார்கள்.. 

மாலை 6.30 அளவில் சன்னிதானம் அடையும் நெல்கதிர்களை தேவசம்போர்டு சார்பாக  சபரிமலை நிர்வாக அதிகாரி வரவேற்று சன்னிதானம்  அழைத்து சென்று கொடிமரம் முன்பாக மேல்சாந்தியிடம் நெல்கதிர்கள் ஒப்படைக்கபடும்.. பின் நிறைபுத்தரி நெல்கதிர்கள் ஊர்வலத்தில் பங்கு பெற்றவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்யபடும்.. தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் முடிந்து இரவு 9 மணி அளவில் நடை அடைக்கபடும்.. 

மறுநாள் 12-08-24 திங்கட்கிழமை காலை 4 மணிக்கு நடைதிறக்கபட்டு நிர்மால்ய தரிசனம் பின் நெல்கதிர்களுக்கு பூஜை செய்யபட்டு கருவரை உள்ளே கொண்டு சென்று அடுக்கபட்டு 5.45 முதல் 6.30 மணிக்கு நிறைபுத்தரி பூஜை நடைபெறும்.. அதை தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனர்  பக்தர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு நிறைபுத்தரி நெல்கதிர்களை  பிரசாதமாக வழங்குவார்.. அதை தொடர்ந்து நிறைபுத்தரி நெல்கதிர்கள் மடபள்ளியில் கைகுத்தல் மூலம் அரிசி ஆக்கபட்டு புது அரிசியில் சுவாமி ஐயப்பனுக்கு அரிசி பாயாசம் நைவேத்தியம் செய்து படைக்கபடும்.. அதை தொடர்ந்து காலை நெய் அபிஷேகம் நடைபெறும்.. தொடர்ந்து அன்றாட வழக்கமான பூஜைகள் நடைபெற்று இரவு 8. 30 மணிக்கு திருநடை அடைக்கபடும்.. 

 

Tags :

Share via