அ.தி.மு.க ...அ.தி.மு.க. .அ.தி.மு.க.. மூன்று திசை ..மூன்று நிலை ஆதரவு ?
ஜிலை 11ஆம் தேதிக்குள்ளாக அ.தி.மு.க விற்குள் என்ன நடக்கும் என்று யாராலும் எதுவும் உறுதியாககணித்து விட முடியாத சூழல் நிலவிக் கொண்டிருக்கின்றது.என்ன நடக்கலாமென்று ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே எதையும் சொல்ல முடியுமென்கிற நிலையில் அ.தி.மு.க.விற்குள் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், சசிகலா என மூன்று தரப்பும் வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பொதுக்குழுவை கூட்ட அனைத்துக் கட்ட பணிகளிலும் உச்ச நீதி மன்றத்தில் தடையில்லா நிலையை உருவாக்கவும் முயன்று கொண்டிருக்கின்றனர்.. பன்னீர் செல்வம் தரப்பு எடப்பாடியினால் பயன் பெறாதவர்கள் ,பழி வாங்கப்பட்டவர்கள் என தேடிக் கண்டறிந்து அவர்கள் ஆதரவைப் பெற முயன்று கொண்டிருப்பதோடு...தம் சமூகத்தை சார்ந்தவர்களை த் திரட்டவும் பணத்தை செலவு செய்யவும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் ..சசிகலா தரப்போ இரண்டு பேரால் பிரச்சனை
பெரிதாகி ..ஒற்றைத்தலைமைப்பிரச்சனையில் ....தன்னை அ.தி.மு.க தொண்டர்களுடன் தலைமை ஏற்க வைக்கும் சூழல் உருவாகும் என்று எதிபார்த்து இருக்கிறார் .மூன்று பேரில் அதிகம் பயத்தின் உச்சத்திலிருப்பது எடப்பாடி ]என்கிறார்கள் .கோடி..கோடியாய் செலவளித்தும் ஜீன் 23 இல் பொதுச் செயலாளராகி. .வெள்ளி முடி.சூடி ..வீர வாள் ஏந்தி .. புன்னகை புரிய முடியாமல வெற்றென தந்த வெள்ளிக்கிரீடமும் வீரவாளாலும் அர்த்தமற்ற கூச்சலில் அடங்கிபோய்விட பொதுச் செயலாளர் கனவும் புஷ் என போய்விட்டதே ..புகழ்மொழி கேட்க வேண்டிய செவிகளில் இகழ் மொழிகள் விழுந்து கொண்டிருக்கிறதே என்றும் இந்த முறை எந்த தவறும் நடக்காமல்...ஜீலை 11இல் பட்டாபிஷேகம் சூ ட்டிவிட வேண்டுமென்பதில் தீவிரமாக உள்ளதாகவும் சொல்கிறார்கள். யாரும் vஎதிர்பாராத நிலையில் உச்சத்தைத் தொட்டவருக்கு இப்பொழுது அதுபோன்ற தொரு அற்புதம் நிகழ வாய்ப்பு உருவாகுமா ..?
Tags :