தமிழக வெற்றிக்கழக அரசு வெள்ளை அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
தமிழக வெற்றிக்கழக அரசு பதவி ஏற்ற பொழுது முதலமைச்சர் விஜய் திமுக ஆட்சியின் நிதி நிர்வாகத்தை குறிப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு இன்று தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் மாநிலத்தின் நிதி நிலவை குறித்த வெள்ளை அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். தமிழக அரசின் நேரடி கடன் சுவை 10 லட்சம் கோடியாக உள்ளதாகவும் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத அளவில் 78.324 கோடியாகவும் தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபர் மீதும் ஒரு லட்சத்து 28 1934 ரூபாய் கடன் சுமை உள்ளதாகவும் மாநில அரசின் மொத்த வருவாயின் 22.8 சதவீத தொகை வாங்கிய கடன்களுக்கு வட்டியாக கட்டப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதோடு மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி விகிதம் அஞ்சு புள்ளி 45 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவிலே தேக்கமடைந்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடன் அண்டை மாநிலங்களை விட அதிகமாக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு 28 புள்ளி 3 சதவீதமாகவும் கர்நாடகா 23.4 சதவீதமாகவும் மகாராஷ்டிரா 19.7 சதவீதமாகவும் குஜராத் 17.6 சதவீதமாகவும் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சீர்குலைந்து அன்றாட செலவுகளுக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டிருந்ததாகவும் மீதி அமைச்சர் மரிய வில்சன் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தமிழக வெற்றிக்கழக அரசின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ள அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தின் கடன் அளவுகள் சட்டபூர்வ வரம்பிற்குள்ளே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிதி பற்றாக்குறையை சீரமைக்க நீண்டகால பொருளாதார சீர்திருத்தங்கள் தேவைப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :


















