மொழிப்போர் தியாகி நேசமணி நினைவு தினம் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி அவர்களின் 56 -வது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் -
திருவாங்கூர் சமஸ்தானத்தால் அடிமைப்பட்டு இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது, இதற்காக நடைபெற்ற போராட்டங்களில் மொழிப்போர் தியாகிகளை வழிநடத்தியதோடு சரியான திட்டங்கள் மூலம் குமரி விடுதலை போராட்டத்தில் முக்கிய தலைவராக விளங்கியவர் மார்ஷல் நேசமணி 1968 ஆம் ஆண்டு மறைந்தார். அவரை கவுரவிக்கும் விதமாக மாண்புமிகு மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் தலைமையிலான தமிழக அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் மணி மண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்த்தது, இந்நிலையில் மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணியின் 56 -வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் படி தமிழக அரசு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Tags :