அரசு அதிகாரிகள் ஓய்வு பெறும்நாளில் பணி இடை நீக்கம் அரசியல் காழ்ப்புணர்ச்சி-அண்ணாமலை

by Editor / 01-06-2024 11:16:35am
அரசு அதிகாரிகள் ஓய்வு பெறும்நாளில் பணி இடை நீக்கம் அரசியல் காழ்ப்புணர்ச்சி-அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் அதிகாலையில் அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற கோ பூஜையில் பங்கேற்று பின்னர் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் ஆகியோரை தரிசித்தனர். சாமி தரிசன மேற்கொண்ட அண்ணாமலை மற்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் ஆகியோருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை பாரத பிரதமர் இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் கடும் தவத்தில் உள்ளதாகவும், அதே போல் இன்று பாராளுமன்ற கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று அண்ணாமலையார் கோயில் மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடி வெற்றி பெற்று வர வேண்டும் என்ற வேண்டுதலை மேற்கொண்டு இன்று சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்தார். 

திருவண்ணாமலை ஏ.டி.எஸ்.பி வெள்ளைதுரை நேற்று காலையில் ஓய்வு பெரும் நாள் அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் திரும்ப பெறப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஓய்வு பெரும் நாளன்று பணி இடை நீக்கம் செய்யப்படுவது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவே பார்ப்பதாகவும், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியான மேற்கொண்டு உள்ள நிலையில் இதை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாகவும், யார் வேண்டுமானாலும் அரசியல் அமைப்பு சட்டப்படி தாங்கள் விரும்பியதை செய்து கொள்ளலாம் என்றும், இதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறினார். 

இன்று டெல்லியில் நடைபெற உள்ள எதிர்க்கட்சியில் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை என்றும், இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர் என்றும், இன்றோடு இறுதிக்கட்ட தேர்தல் முடிவடையும் நிலையில் இன்று வெளியாக உள்ள தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பில் கூட  காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியினர் பங்கேற்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளது, அவர்களுக்கு 543 தொகுதிகளும் எந்த பக்கம் செல்லும் என்பது இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் தெரியும் என்றும், தேர்தல் முடியும் வரை தான் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கூறி வந்துள்ளனர் என்றும், காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளும் விதமாகவே உள்ளதாகவும், தேர்தல் நடக்கும் வரை தான் அவர்களது நாடகம் அது இன்று முடிந்து விட்டது என்றும், மூன்றாவது முறையாக மோடி தான் வாழ்க பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், அதனால் தான் மோடி அவர்களின் கன்னியாகுமரி வருகையை அரசியல் செய்கின்றனர் என்றும், பிரதமர் அங்கே தியானம் மேற்கொண்டாலும் பொதுமக்கள் தங்கு தடையின்றி விவேகானந்தர் பாறைக்கு சென்று வருகிறார்கள் என்றும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

 

 

Tags : அரசு அதிகாரிகள் ஓய்வு பெறும்நாளில் பணி இடை நீக்கம் அரசியல் காழ்ப்புணர்ச்சி-அண்ணாமலை

Share via