பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்

by Staff / 27-01-2023 12:51:39pm
பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்

பழம்பெரும் நடிகை ஜமுனா (86) ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். ஜமுனாவின் உடல் இன்று காலை 11 மணிக்கு ஃபிலிம் சேம்பருக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜமுனா 1930 ஆகஸ்ட் 30 அன்று ஹம்பியில் பிறந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழில், 1954ஆம் ஆண்டு 'பணம் படுத்தும் பாடு' படத்தின் மூலம் அறிமுகமானார். தெனாலி ராமன், நல்ல தீர்ப்பு, மருதநாட்டு வீரன், தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

 

Tags :

Share via