தமிழக கேரளா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்.சீரானது.
தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியாரை வழியாக கேரளமாநிலத்திற்கு தினமும் 800க்கும் மேற்பட்ட கனிமவள வாகனங்கள் சென்றுவரும் நிலையில் தற்போது வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் ஒரு சில கனிமவளவாகன ஓட்டுனர்கள் ஆங்காங்கே கானாம்வாழை வாகனங்களை நிறுத்தி செல்வதாலும்,டிரைலர் வாகனங்களால் மலைவழிச்சாலையில் வளைவுகளில் திருப்பு முடியாத சூழலால் விபத்துக்களும்,வாகன பழுதுகளும் ஏற்பட்டுவருவதால் காவல் துறையினரின் அறிவுறுத்தல்களை கேட்க மறுப்பதாலும் இது மாதிரியாக தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.நள்ளிரவு 1 மணிக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 9 மணிவரை நீடித்த நிலையில் தற்போது சீராகியுள்ளது.
தற்சமயம் சபரிமலை சீசன் காலமென்பதால் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதை ஆகிவிட்டது தினந்தோறும் இரவில் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காவல்துறையினரும் அவர்களால் முடிந்தவரை போக்குவரத்தை சீர் செய்யும் பணியை செய்து வருகின்றனர் ஆனால் கட்டுக்குள் வர மறுக்கிறது.மாவட்ட நிர்வாகம் இதற்கு சரியான உத்தரவுகளை உடனடியாக பிறப்பித்தால் மட்டுமே இதற்கு தீர்வு. தற்பொழுது சபரிமலை சீசன் காலம் என்பதால் கூடுதலாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் இருந்து வெளியே செல்வதால் கனிம வாகனங்கள் ராட்சச வாகனங்கள் வருவதாலும் இந்த போக்குவரத்து மெர்சல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
Tags : தமிழக கேரளா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்.சீரானது.