அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.64 லட்சம் மோசடி

அரசு பள்ளி வேலை வாங்கித் தருவதாக கூறி, தனியார் பள்ளி ஆசிரியை ராஜேஸ்வரியிடம் ரூ. 64 லட்சம் மோசடி செய்த வழக்கில், கோவை ஆர். எஸ். புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மச்சகுண்டன்பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, அரசு பள்ளி ஆசிரியை வேலைக்கு முயற்சி செய்து வந்தார். அவரிடம், கல்வித்துறை உயர் அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியவர் மணி என்ற நபர், பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாக கூறினார். இதனை நம்பிய ராஜேஸ்வரி, 2023ல் ரூ. 8 லட்சம் முதல் தற்போது வரை மொத்தம் ரூ. 64 லட்சம் வரை பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வேலை கிடைக்காததால், பணத்தை திரும்ப கேட்டுள்ளார். மணி ரூ. 1.28 லட்சம் மட்டுமே திருப்பிக் கொடுத்து, மீதமுள்ள தொகையை வழங்காமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து, மணியை தேடி வருகின்றனர்.
Tags :