“நீங்கள் நடத்தும் நாடகம் தொடரட்டும்” - திமுகவை விளாசிய அண்ணாமலை

by Editor / 22-03-2025 01:09:48pm
“நீங்கள் நடத்தும் நாடகம் தொடரட்டும்” - திமுகவை விளாசிய அண்ணாமலை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரச்சனை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, நீங்கள் நடத்தும் நாடகம் தொடரட்டும். அதோடு கூட்டத்துக்கு வந்துள்ள அண்டை மாநில முதலமைச்சர்களுடன் தமிழக உரிமைகள் பற்றியும் பேசுங்கள்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via