ஒரே நாளில் 30 மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

by Staff / 18-08-2024 12:15:44pm
ஒரே நாளில் 30 மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாடு முழுவதும், நேற்று ஒரே நாளில் 30 ஷாப்பிங் மால்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று, சென்னை அண்ணா நகரில் உள்ள விஆர் ஷாப்பிங் மாலுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனே அங்கு விரைந்த திருமங்கலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்துவருகின்றனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo