மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் தரிசிக்க அனுமதியில்லை

by Editor / 10-09-2021 10:37:39am
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில்  தரிசிக்க அனுமதியில்லை

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்படுகிறது.கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகா் சிலையை பொது இடத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சப்பிள்ளையாருக்கு 30 கிலோ, மாணிக்க விநாயருக்கு 30 கிலோ கொழுக்கட்டை படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெள்ளிக்கிழமை மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி வெறிச்சோடி காணப்பட்டது.

 

Tags :

Share via

More stories