ரயிலில் திடீர் தீ விபத்து
பெங்களூருவில் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் இன்று காலை உதயன் எக்ஸ்பிரஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பெட்டிகள் தீப்பிடித்ததால் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் ரயில் நிலையம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தீ விபத்தால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். இந்த தீ விபத்தில் காயம், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :