லெபனானில் சுமார் 8 லட்சம் பேர் வரை இடப்பெயர்ந்துள்ளனர். 

by Admin / 07-03-2026 07:57:56am
லெபனானில் சுமார் 8 லட்சம் பேர் வரை இடப்பெயர்ந்துள்ளனர். 

 மனாமாவில், ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக சைரன்கள் ஒலித்தன. மனாமாவில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் 5-வது படைப்பிரிவு தலைமையகம் நேரடியாகத்ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார் தளங்கள்சேதமடைந்துள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இத்தாக்குதலை நடத்தியது.

சவுதி அரேபியாவின் ரியாத் அருகே உள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தை நோக்கி ஏவப்பட்ட மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை அந்த நாடு மார்ச் 6-ம் தேதி இடைமறித்து அழித்தது.

கத்தாரில் உள்ள அல் உதித் விமான தளமும், குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் விமான தளமும் தாக்குதலுக்கு  உள்ளாகின.இருப்பினும், தாக்குதல் தொடரா வண்ணம் அவை இடைமறிக்கப்பட்டன.

ஈரானியத் தலைவர்  அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்குப் பழி வாங்க ஹெஸ்  பொல்லா  மார்ச் 2-ம் தேதி முதல் இஸ்ரேல் மீது  தாக்குதல்களைத் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில்  தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் தரைவழி ஊடுருவலையும் மேற்கொண்டுள்ளது. இதனால் லெபனானில் சுமார் 8 லட்சம் பேர் வரை இடப்பெயர்ந்துள்ளனர். 

தற்போது நிலவும் இந்த சூழலில், அமெரிக்கா தனது அரசு சாரா பணியாளர்களை பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் ஈராக்கிலிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது. 
 

 

Tags :

Share via

More stories