அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஆளுநர்

by Staff / 12-02-2024 11:56:04am
அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஆளுநர்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆனால், அரசின் உரையைப் படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அரசின் உரையை முழுவதுமாக வாசித்தார். இந்த நிலையில், சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை அவருக்கு அருகே அமர்ந்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவை நிறைவடையும் முன்பே அங்கிருந்து வெளியேறினார். தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இன்றைய அவை அலுவல்கள் நிறைவு பெற்றது. ஆளுநர் தனது வாகனத்தில் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

 

Tags :

Share via

More stories