தனுஷ் படத்தின் படப்பிடிப்பிற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் தடை.
தனுஷ் படத்தின் படப்பிடிப்பிற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் தடை.
தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை பழைய குற்றாலம் செங்குளம் கால்வாய் குறுக்கே பாலம் அமைத்து மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதத்திற்கு மேலாக கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனிடையே, தீயணைப்புத்துறை,பொதுப்பணி துறையினரின் அனுமதி பெறாமல் படப்பிடிப்புக்காக சிறிய பாலங்கள் கட்டப்பட்டதாகவும், வெடிகளை அதிகமாக வெடிக்கச்செய்து படப்பிடிப்பு நடத்துவதாகவும், இதனால் வனவிலங்குகள் வனப்பகுதிகளிலிருந்து மாற்றுவழியாக ஊருக்குள் நுழைந்து தனியார் தோட்டங்களில் சேதம் ஏற்ப்டுத்திவருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்களையும் கொடுத்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தளம்பாறை மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் வெடி விபத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஏற்படும் தீப்பிழம்பை காட்சியாக பட குழுவினர் எடுத்து இருக்கின்றனர். இதனை அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனைப்பார்த்த படக்குழுவினர், அந்த இளைஞரின் செல்போனை பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இளைஞரிடம் செல்போன் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, அந்த இளைஞர் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் எடுத்த வீடியோவை வெளியிட்டு, தனுஷ் படக்குழுவினர் தனது செல்போனை பறித்துச்சென்றதாகவும், அதன் பின்னர் கொடுத்ததாகவும் பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ காட்சி இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சி அலையை ஏற்ப்டுத்தியதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை ஆகிய துறைகளில் அனுமதி பெறாத காரணத்தினால் படப்பிடிப்புக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக்க தென்காசி மாவட்ட ஆட்சிதலைவர் துரை.ரவிசந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
Tags :