பாமக இளைஞரணி தலைவராக தமிழ்க்குமரன் நியமனம்.

பாமக வில் இளைஞரணி தலைவராக தமிழ்குமரனை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அன்புமணிக்கு பின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்குமரன், கடந்த 2022ல் பதவி விலகினார். அன்புமணியின் எதிர்ப்பு காரணமாக அவர் பதவி விலகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் ராமதாஸ் - அன்புமணி இடையே பிரச்னை முற்றியுள்ள நிலையில், பாமக வில் இளைஞரணி தலைவராக தமிழ்குமரனை நியமித்து உத்தரவு பாமகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : பாமக இளைஞரணி தலைவராக தமிழ்க்குமரன் நியமனம்.