தொற்று நோயாக கருப்பு பூஞ்சை நோய் - தமிழக அரசு அறிவிப்பு!

by Editor / 21-05-2021 09:23:54am
தொற்று நோயாக கருப்பு பூஞ்சை நோய் - தமிழக அரசு அறிவிப்பு!

கொரனோ வைரஸ் தொற்று போல் கருப்பு பூஞ்சை நோயும் தமிழகத்தை கடந்த சில நாட்களாக தாக்கி வருகிறது. ஏற்கனவே வடமாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அங்கிருந்து தற்போது தமிழகத்திற்கும் கருப்பு பூஞ்சை நோய் பரவி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேற்று மதுரையில் மட்டும் 50 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி உள்ளதாகவும் ஒருவர் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக உயிரிழந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய்களை தொற்றுநோயாக சற்றுமுன் தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய் என குஜராத் ராஜஸ்தான் ஒடிசா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் அறிவித்துள்ள நிலையில் தற்போது தமிழகமும் தொற்றுநோய் என அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories