பொங்கல் போனஸ் ரூ. 7ஆயிரம் வழங்க வேண்டும்

by Staff / 07-12-2022 04:18:55pm
பொங்கல் போனஸ் ரூ. 7ஆயிரம் வழங்க வேண்டும்

தமிழகம் முழுவதும் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ. 7000 வழங்க வேண்டும் என  தமிழ்நாடு ஹெச். எம். எஸ் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் டாக்டர் ராஜலக்ஷ்மி ராஜ்குமார் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில்,  தமிழ்நாட்டில் கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு பொங்கல் திருநாளை கொண்டாடுகின்ற வகையில் பொங்கல் போனஸ் ஆக ரூ. 7000 வழங்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, வீடு கட்டுவதற்கு ரூ. 4 லட்சம் வழங்கும் திட்டத்தில் குறைகளை நிவர்த்தி செய்து, திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 17 நல வாரியங்கள் மாவட்ட தோறும் செயல்பட்டு வருகிறது. அதில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். அதில் மாவட்டம் தோறும் ஒரே மாதிரி நடைமுறையை பின்பற்ற தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தொழிலாளர்களின் ஆண் குழந்தைக்கு பத்தாம் வகுப்பு, பதினோறாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பயில்வதற்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தினர்.  

இந்நிகழ்ச்சியில்  மாவட்டச் செயலாளர் டாக்டர். ராஜ்குமார் , மாவட்ட இணைச் செயலாளர் சுப்பையா கண்ணன், மீனாட்சி சுந்தரம், திருச்செந்தூர் தொகுதி செயலாளர்  ஜாகிர் உசேன்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல், மாவட்ட இணைபொருளாளர் சூரிய கலா மாவட்ட துணைச் செயலாளர் செல்வா. சாதிக்பாஷா, மரிய  நிவ்யா , செல்லையா, சந்திராமணி , ராஜேஸ்வரி , மாலதி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via