எடப்பாடிகாணாமல் போன மாற்றுத்திறனாளி வனப்பகுதியில் எலும்பு கூடாக மீட்பு
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் பக்கநாடு ஊராட்சிக்குட்பட்ட கல்லூரல் காடு வனப்பகுதியில் மண்டை ஓடுகளுடம் மனித எலும்புக்கூடு சிதறி கிடப்பதாக அப்பகுதி பொது மக்கள் பூலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பூலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் செலவடை பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சின்னக்கவுண்டர் (55) என்பவர் கையில் வளையம் அணிந்த ப வேஷ்டி பனியனுடன் கடந்த மாதம் 29ஆம் தேதி காணாமல் போனதாக ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில் சின்ன கவுண்டரின் உறவினர்களை அழைத்துச் சென்று பார்த்தபோது இறந்த கிடக்கும் எலும்புக்கூடு சின்ன கவுண்டர் தான் என்று உறுதி செய்யப்பட்டு எலும்பு கூடுவை மீட்டு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாற்றுத்திறனாளி சின்னகவுண்டர் ஏதேனும் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வன விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்து இருப்பாரா? என்பது குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள வனப்பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்டெடுக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ...
Tags : எடப்பாடிகாணாமல் போன மாற்றுத்திறனாளி வனப்பகுதியில் எலும்பு கூடாக மீட்பு



















