சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 5,16,17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

by Editor / 09-08-2023 10:06:49pm
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 5,16,17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
14/08/2023 - அகஸ்தியர் அருவி சுற்றுலா பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது.15,16,17 /08/2023- ஆடி அமாவாசை  G.O 3 ல் குறிப்பிட்டவாறு பொதுமக்கள் முகாமிற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.18/08/2023 - கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் அரசு பேருந்து மூலம் கோவிலில் இருந்து கீழே இறங்கவும்.
19/08/2023 - ஆடி அமாவாசை முடிந்த பிறகு பொதுமக்களால் வனப்பகுதிக்குள் விட்டுச் செல்லப்பட்ட  கழிவுகளை அகற்றும் பணி இருப்பதால் அகஸ்தியர் அருவி மூடப்படுகிறது.
14/08/2023 - 18/08/2023  ஆகிய நாட்களுக்கு மணிமுத்தாறு அருவி மூடப்படுகிறது.சுற்றுலாபயணிகள் காக்காச்சி மற்றும்  குதிரைவெட்டிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

Tags :

Share via