ஜிலேபி செய்முறை

by Admin / 29-07-2021 03:51:27pm
ஜிலேபி செய்முறை

 

தேவை

உளுந்தம்பருப்பு – 250 கிராம்

அரிசி – 30 கிராம்

சீனி – 1 கிலோ

லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ் டால்டா, நெய் அல்லது ரீபைண்ட் ஆயில்

செய்முறை

       அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ் கலர் சேர்த்து (தண்ணீர் சீனி மூழ்கும் வரை) அடுப்பில் வைக்கவும். அதே நேரம் உளுந்தம்பருப்பையும் அரிசியையும் சேர்த்து ஊறவைக்கவும். சீனிபாகு கம்பிபாகு வந்தவுடன் இறக்கி வைக்கவும். பருப்பையும் அரிசியையும் தண்ணீர் லேசாகத் தொட்டுக் கொண்டு பொங்க ஆட்டவும். வாணலியில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் மாவு உரலில் ஆட்டிக்கொண்டு இருக்கும்போதே ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி எண்ணெயில் சுற்றவும் நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போடவும். ஒரு தடவைக்கு 4,5 ஜிலேபி போடலாம். முதலில் போட்ட ஜிலேபியை எடுத்து தட்டி வைக்கவும். அடுத்தது பிழியலாம் சுவையான ஜிலேபி ரெடி (மாவு குழையாக இருந்தால் 1 கரண்டி மைதா மாவை சேர்க்கவும்.)

 

 

Tags :

Share via