18 ,19 தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு .

by Admin / 13-11-2025 05:33:03pm
18 ,19 தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு .

தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  மயிலாடுதுறை ,.ராமநாதபுரம், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நவம்பர் 18 ,19 தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இன்று லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

 

Tags :

Share via

More stories

Logo