ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரேன் நிலவரம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது

by Staff / 06-04-2022 01:36:05pm
ஐநா பாதுகாப்பு  கவுன்சிலில் உக்ரேன்  நிலவரம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது

உக்ரேனில் மக்கள் நிலைமை மோசமடைந்து உயிர் செய்த மற்றும் அடக்குமுறைகள் அதிகரித்துள்ளது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. 

போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்தியாவுக்கான பிரதிநிதி திரு மூர்த்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உக்ரேனுக்கு  ஏற்பட்டிருக்கும் போர்ச்சூழல் உணவுப் பொருள்கள் மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான ரீதியான உதவிகளை இந்தியா வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

வரும் நாட்களில்உக்ரேனுக்கு  மருந்துகள் விநியோகம் அதிகப்படுத்தும் என்றும் இந்தியா உறுதி அளித்துள்ளது பூச்சா பகுதியில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்ட வரும் தகவல் மிகுந்த கவலை அளிப்பதாகவும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்று பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது

 

Tags :

Share via

More stories