செருப்பால் தாக்கப்பட்ட பட்டியலின பெண்

by Staff / 10-02-2023 03:13:11pm
செருப்பால் தாக்கப்பட்ட பட்டியலின பெண்


சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் நாட்டில் பல இடங்களிலும் சாதிய தீண்டாமை தணியவில்லை. சமீபத்தில் கர்நாடக மாநிலம் கொப்பல் என்ற இடத்தில் பட்டியலின பெண்ணை மாற்று சாதியைச் சேர்ந்த ஒருவர் செருப்பால் தாக்கினார். ஷோபம்மா என்ற பெண்ணின் கால்நடைகள் தோட்டத்திற்குள் வந்ததால் ஆத்திரமடைந்த அம்பரேஷ் கம்பர் என்பவர், அவரது நிலத்துக்குள் நுழைந்து, சாதிப் பெயரைச் சொல்லி அவரைச் செருப்பால் தாக்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via
Logo