கேரளாவில் இருந்து நிபா அறிகுறியுடன் வருபவர்களை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறைக்கு உத்தரவு - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

by Staff / 14-09-2023 03:17:12pm
கேரளாவில் இருந்து  நிபா அறிகுறியுடன் வருபவர்களை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறைக்கு உத்தரவு - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் டெங்கு நோய் சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. ரத்த வங்கியும் தயார் நிலையில் உள்ளது. மக்கள் அச்சப்படாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என வலியுறுத்திய தமிழிசை செளந்தரராஜன்

கேரளாவில் இருந்து வருபவர்கள் நிபா அறிகுறியுடன் வந்தால் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்  பேட்டி.

 

Tags :

Share via

More stories

Logo