தமிழக வெற்றிக் கழக கட்சியினர் சி.சி.டி.வி காட்சிகளை கரூரில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஒப்படைப்பு

by Admin / 08-11-2025 02:46:11pm
 தமிழக வெற்றிக் கழக கட்சியினர்  சி.சி.டி.வி காட்சிகளை கரூரில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஒப்படைப்பு

 தமிழக வெற்றிக் கழக கட்சியினர் தங்கள் பிரசார வாகனத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கரூரில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். 

செப்டம்பர் 27 அன்று கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.இந்த வழக்கை உச்ச நீதி.மன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது. .சி.பி.ஐ அதிகாரிகள், விசாரணைக்காக, பேரணியின் போது நடிகர் விஜய் பயன்படுத்திய பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின்  சி. சி. டி .வி காட்சிகளை  சமர்ப்பிக்குமாறு  கட்சியின் தலைமை  அலுவலகத்தில்  சம்மன் வழங்கியிருந்தனர். இந்த சம்மனைத் தொடர்ந்து, கட்சியின் பிரதிநிதிகள்  சி.சி.டி.வி காட்சிகளை கரூரில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.சி.சி.டி.வி காட்சிகள்  சி.பி.ஐ விசாரணையில் ஒரு முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது  அதிகாரிகள் தொடர்ந்து  வழக்கு தொடர்பாக காவல் துறையினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 தமிழக வெற்றிக் கழக கட்சியினர்  சி.சி.டி.வி காட்சிகளை கரூரில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஒப்படைப்பு
 

Tags :

Share via

More stories