மணப்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் திருமணமான சில நாட்களில் மணப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். பூர்ணிமாவுக்கும் (26) விஷாலுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கட்டிட ஒப்பந்த தொழில் செய்து வரும் விஷால், சுபாஷ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் பூர்ணிமா வியாழக்கிழமை காலை தனது வீட்டின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :