20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்ட 42 வயது ஆசிரியர்.

by Editor / 11-12-2022 07:50:31am
20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்ட 42 வயது ஆசிரியர்.

 42 வயது ஆசிரியர் ஒருவர் தனது 20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஆங்கிலம் படிக்க வந்த  மாணவி ஸ்வேதா குமாரிஎன்பவரை ஆசிரியர்  சங்கீத் குமார் திருமணம் செய்து கொண்டார். மாணவியும்,ஆசிரியரும்   காதலித்து வந்ததால், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆசிரியரின் மனைவி பல வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமை அன்று  ஆசிரியர் சங்கீத் குமார்  ரோஸ்ரா பஜாரில் உள்ள கோயிலுக்குச் சென்று ஸ்வேதாவுடன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்ட 42 வயது ஆசிரியர்.
 

Tags :

Share via