காளான், காலிஃபிளவருக்குள் மறைத்து ரூ.6 கோடி கஞ்சா கடத்தல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான 6 கிலோ ஹைட்ரோ போனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த வடமாநில இளம்பெண்ணின் உடமைகளை சோதனை செய்தபோது காளான், காலிஃபிளவருக்குள் மறைத்து கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளம்பெண் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :