பா.ஜ.க. மற்றும் திமுக கட்சியில் இருந்து விலகிய தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்

கோவில்பட்டி அருகே கடம்பூர் உள்ள கே.சிதம்பராபுரத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னணியில் பா.ஜ.க. மற்றும் திமுக கட்சியில் இருந்து விலகிய தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்
.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடம்பூர் உள்ள கே.சிதம்பராபுரம் கிராமத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ இல்லத்தில் வைத்து. வடக்கு மாவட்ட இணை செயலாளர் 13-வது வார்டு அதிமுக மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் தலைமையில்.பா.ஜ.க. கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஞ்சனா தேவி, வடக்கு மாவட்ட மகளிர் அணி ஒன்றிய செயலாளர் கலா உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் திமுக, பா.ஜ.க. கட்சியிலிருந்து விலகி முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் மாற்றுக் கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து அதிமுக தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வக்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் நீலகண்டன், மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமலா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

Tags :