நாவலர் நெடுந்செழியன் நூற்றாண்டு-சிலை திறப்பு

by Admin / 26-12-2021 10:39:43am
நாவலர் நெடுந்செழியன் நூற்றாண்டு-சிலை திறப்பு

 

நாவலர் நெடுந்செழியன் நூற்றாண்டு-சிலை திறப்பு

இரா.நெடுந்செழியன் நூற்றாண்டு   நிறைவுவிழா தமிழக அரசு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் இன்று திறந்து வைத்தார். நாட்டுடைமையாக்கப்பட்ட அவருடைய 30நூல்களுக்குக்கான நூலுரிமைத்தொகையையும் வழங்கினார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இரா.நெடுஞ்செழியனுக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அவருடைய சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தஞ்சை தருக்கண்ணபுரத்தில்,11.7.1920 ல் ராஜகோபாலன்-மீனாட்சி தம்பதிகளுக்கு  பிறந்த நாவலர் தமிழ் மீது கொண்ட பற்றால் தம்பெயரை நெடுஞ்செழியன் என மாற்றிக்கொண்டார்.1944ஆம் ஆண்டில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்.1967லிருந்து1969வரை அண்ணாவின்ஆட்சியில் கல்வி அமைச்சராகவும் கலைஞர்ஆட்சியில்1971லிருந்து1975வரை கல்வி அமைச்சராகவும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் உணவுத்துறை,நிதி அமைச்சராகவும்  இருந்தவர்.

நாவலர் நெடுந்செழியன் நூற்றாண்டு-சிலை திறப்பு
 

Tags :

Share via