4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணியின் போது 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சிதறி விழுந்துள்ளன. இது குறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
Tags :