மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக பாஷா கடந்த பிப்ரவரி 18ம் தேதி பிணையில் வெளிவந்து சிகிச்சை பெற்று வந்தஅவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த நிலையில் பாஷா உடலுக்கு அஞ்சலி செலுத்திய மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதை கண்டித்தும், கைது செய்ய கோரியும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், தலைமையில் 6 பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
Tags : மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.