காலாவதியான பொருட்கள் விநியோகம் ரேஷன் கடை முற்றுகை

by Staff / 22-12-2022 03:54:57pm
 காலாவதியான பொருட்கள் விநியோகம் ரேஷன் கடை முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ராமநாதபுரம் அருகே செல்லக்குட்டியூரில் டிடி-562 எண் கொண்ட தொடக்க வேளாண்மை நகரும் கூட்டுறவு ரேஷன் கடை உள்ளது.இந்த கடையில், 100க்கும் மேற்பட்ட நாகா சப்பாத்தி பாக்கெட்கள், ஈரோடு பகுதியில் தயாரிக்கப்படும் மங்களம் மல்லி தூள் ஆகிய காலாவதியான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கியதால் 300க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஊர் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உணவுத்துறை அமைச்சர் இருக்கும் மாவடத்திலேயே இவ்வாறு காலாவதியான பொருட்கள் விநியோகம் செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரேஷன் கடையை முற்றுகையிட்டதால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

2023 பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மோசமான தரத்துடன் வினியோகம் செய்யப்பட்டதாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்தன. வரும் ஆண்டிலும் அதே போன்று நடக்கக்கூடாது என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே காலாவதியான பொருட்கள் விற்பனை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via