கல் குவாரிகள் மூடப்பட்டதால் கட்டிட பொருட்கள் இல்லாமல் கட்டிட பணிகள் பெரும் பாதிப்பு

by Editor / 05-06-2022 10:41:40am
கல் குவாரிகள் மூடப்பட்டதால் கட்டிட பொருட்கள் இல்லாமல் கட்டிட பணிகள் பெரும் பாதிப்பு

தென்காசி திருநெல்வேலி மாவட்டங்களில் கல் குவாரிகள் மூடப்பட்டதால் கட்டிட பொருட்கள் இல்லாமல் கட்டிட பணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

 திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கடந்த 20வது  தினங்களாக கட்டிடப் பணிகளுக்கு தேவையான குண்டுகள், ஜல்லி, எம்சாண்ட், பீசாண்ட் உள்ளிட்ட  எந்தவிதமான கட்டுமான பொருட்கள் வினியோகம் இல்லாமல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக இரண்டு மாவட்டங்களைச் சார்ந்த பல ஆயிரக்கணக்கான கட்டிடத்தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர், மேலும் தற்பொழுது தென்காசி,திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த கட்டிட பணி நடத்தும் வீட்டு உரிமையாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்டோர் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள ஏராளாமான கிரஷர்களில் பொருட்கள் இருந்தும்,குவாரிகளில் இருந்தும் பொருட்கள் எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. உரிய அனுமதிச் சீட்டு வழங்கப்படும் காரணமாக இரண்டு மாவட்டங்களிலும் கட்டிட பணிகள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். உடனடியாக 2 மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை எடுத்து கட்டுமான பொருட்களை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல் குவாரிகள் மூடப்பட்டதால் கட்டிட பொருட்கள் இல்லாமல் கட்டிட பணிகள் பெரும் பாதிப்பு
 

Tags : With the closure of the stone quarries the building works without building materials were greatly affected

Share via