சிகரெட்டை சாலையில் எறிந்தவருக்கு ரூ.55,000 அபராதம்
துண்டு சிகரெட்டை சாலையில் வீசி எறிந்த பிரிட்டன் நபருக்கு ரூ.55,000 அபராதம் விதிக்கப்பட்டது. லண்டனில் சபை ஊழியர்களுக்கு முன்பாக சிகரெட் துண்டுகளை வீதியில் வீசி எறிந்த பிரிட்டன் நபருக்கு இந்திய மதிப்பில் 55,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடித்த அலெக்ஸ் டேவிஸ் என்பவர் அமலாக்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் படி, சிகரெட் துண்டுகள் உலகளவில் அதிகம் அகற்றப்படும் கழிவுப் பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 766.6 மில்லியன் கிலோகிராம் நச்சுக் கழிவுகளை உருவாக்குகிறது.
Tags :