சார்பு ஆய்வாளர் மீது - பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 

by Editor / 25-01-2025 11:19:16pm
சார்பு ஆய்வாளர் மீது - பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 

தென்காசி மாவட்டம், வீராணம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வி.கே.புதூர் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

இந்த நிலையில், 6 நாட்களுக்கு மேலாகியும் சார்பு ஆய்வாளர் சதிஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மன வேதனையில் இருந்த அந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது சார்பு ஆய்வாளரான சதீஷ்குமார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வி.கே.புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

7 நாட்களுக்குப் பிறகு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் சார்பு ஆய்வாளர் கைது செய்யப்படுவார் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : சார்பு ஆய்வாளர் மீது - பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 

Share via