புதிய ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண திரண்ட சுற்றுலாப்பயணிகள்.

புதிய ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் இன்று அதிகாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்களும் குவிந்தனர். இதையடுத்து முதல் சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து கொண்டனர்.பின்னர் கடலில் புனித நீராடி புத்தாண்டை கொண்டாடிட அவரவர்கள் சார்ந்த ஆலயங்களை நோக்கி பயணித்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள பண்பொழி திருமலை முருகன் ஆலயம்,இலஞ்சிகுமரன் கோவில், உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.
Tags :